×

புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் : திருமா கோரிக்கை

சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய குழு செல்லவில்லை என மக்கள் கூறியுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் என கோரினார். டிசம்பர் 3-ம் தேதி வைகோ அறிவித்துள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகளும் பங்கேற்கும் என்றார். திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியாக திரளும் என்றார். திமுகவுடன் தோழமையுடன் தான் இருப்பதாக கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : villages ,storm ,Thirumala , Liberation from the leopards, Thirumavalavan, secular parties
× RELATED மரக்காணம் பகுதியில் தாய்லாந்து நாட்டு மரவள்ளி பயிரிட விவசாயிகள் ஆர்வம்