×

மேக்சிஸ் நிறுவன முறைகேடு வழக்கு ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும்: நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை கோரிக்கை

புதுடெல்லி: மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் 3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதால் அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப்பணம் கைமாறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
 நிறுவனத்தின் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் மேக்சிஸ் நிறுவன முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்து நவம்பர் 26ம் தேதிவரை ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரையும் கைது செய்ய தடை விதித்து கடந்த 1ம் தேதி உத்தரவிட்டது.  இந்த மனு, சிறப்பு நீதிபதி ஓபி.சைனி அமர்வில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா தனது வாதத்தில், “மேக்சிஸ் நிறுவன முறைகேடு வழக்கில் பல முக்கிய ஆதாரங்களை தற்போது திரட்டி வைத்துள்ளோம். அதனால் முதல் குற்றவாளியான ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும். அவருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது’’ என வாதிட்டார். இதே கோரிக்கையை சிபிஐ தரப்பிலும் முன்வைக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, “வழக்கில் ப.சிதம்பரம், மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. இருப்பினும் இருவரையும் வரும் டிசம்பர் 18ம் தேதி வரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதிக்கிறது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI ,PCC , Maxis Corporate Scam Case, P. Chidambaram, CPI, Implementation Department
× RELATED “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர்...