×

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நினைவு பேரணி வைகோ உள்ளிட்ட 262 பேர் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

ெசன்னை: விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சுப.தமிழ்செல்வன் மறைவுக்கு இரங்கல் ெதரிவித்து நடந்த பேரணியில் கலந்துகொண்ட வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட 262 பேர் மீதான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007 நவம்பர் 7ல் இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்செல்வன் மரணமடைந்தார். இதையடுத்து, அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2007 நவம்பர் 12ம் தேதி மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் சென்னை மன்றோ சிலையிலிருந்து பேரணி நடந்தது. அப்போது, பேரணியில் கலந்துகொண்ட வைகோ உள்ளிட்ட 262 பேர் மீது போலீசார் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின்கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 2009 டிசம்பர் 11ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வைகோ உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகோ சார்பில் வக்கீல் தேவதாஸ் ஆஜராகி, வழக்கு பதிவு செய்வதற்கு முன் மத்திய அரசிடம் அனுமதி பெறப்படவில்லை. வழக்கு பதிவு செய்ததில் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று வாதிட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு வைகோ உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,persons ,LTTE ,Vimo , Tiger, Vaiko, cancels case, High Court,
× RELATED 8 தமிழர்களை கொன்றவருக்கு மன்னிப்பு...