×

திருவேற்காடு காவல் நிலையம் முன்பாக போதை ஆசாமி தீக்குளிக்க முயற்சி

பூந்தமல்லி: சென்னை திருவேற்காட்டை சேர்ந்தவர் பாஸ்கர் (32), குப்பை மற்றும் சாலையோரம் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலிதீன் கவர்களை சேகரித்து அந்தோணி என்பவரின் பழைய இரும்பு காயலான்  கடையில் அடிக்கடி விற்று வந்தார். இதில் அந்தோனிக்கும் பாஸ்கருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் அந்தோணி மனைவியை பாஸ்கர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு திருவேற்காடு போலீஸ் நிலையம் முன்பு வந்த பாஸ்கர் உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு  வந்து நின்றார். இதனைக்கண்டதும் அங்கு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து பாஸ்கர் உடலில் தண்ணீரை ஊற்றி விட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘திருவேற்காடு பகுதியில் காயலான் கடை நடத்தி வரும் நபருக்கும், பாஸ்கருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் பாஸ்கரின் சைக்கிளை திருட்டு  சைக்கிள் என்று கூறி அந்த நபர் பிடுங்கி வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுக்க போதையில் பாஸ்கர் வந்துள்ளார். போலீசார் போதை தெளிந்தவுடன் வருமாறு கூறி உள்ளனர். இதனால்  ஆத்திரமடைந்த பாஸ்கர் போலீசார் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக கூறி உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது’’ தெரியவந்தது. இதுகுறித்து திருவேற்காடு போலீசார்  விசாரிக்கின்றனர்.

திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் குடியிருப்பு பகுதியை சேர்ந்த 15 என்ற சிறுவனை திருட்டு வழக்கில் விசாரிக்க, கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று அடித்து உதைத்ததால்,  மனமுடைந்த சிறுவன் வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். கடந்த ஆகஸ்ட் மாதம் திருவேற்காடு கோலடி பகுதியை சேர்ந்த செவிலியர் ரேணுகா (34) என்பவருக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக, ரேணுகாவை திருவேற்காடு காவல் நிலையம்  அழைத்து சென்ற போலீசார், விபச்சார வழக்கில் கைது செய்வதாக மிரட்டியதால், காவல் நிலையம் முன்பு தீக்குளித்து இறந்தார்.இதேபோல் செப்டம்பர் மாதம் 22ம் தேதி திருவேற்காடு ஐயப்பா நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குணசேகரன் (55) சக டிரைவர்களுடன் தகராறு காரணமாக புகார் அளிக்க சென்றபோது, போலீசார் புகாரை வாங்க மறுத்து, விரட்டி  அடித்ததால், மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.





பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Asimi ,police station ,Thiruvakadu , Before , Thiruverkadu ,police station,fire Asamani
× RELATED மலேசியாவில் காவல் நிலையத்தில்...