×

கஜா புயல் பாதிப்பு குறித்து பார்வையிட இரண்டாவது நாளாக மத்திய குழு தஞ்சையில் ஆய்வு

தஞ்சை: கஜா புயல் பாதிப்பை பார்வையிடுவதற்காக மத்திய குழு இரண்டாவது நாளாக  தொடங்கியுள்ளது. மொத்தம் 3 நாட்கள் அவர்கள் ஆய்வை மேற்கொள்ள இருக்கிறார்கள். டெல்டா மாவட்டங்களில்  கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேற்று மாலை 5 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கிய இந்த பயணமானது 9 மணி அளவில் முடிந்த நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அவர்கள் பார்வையிடுவதற்காக இருந்தது ஆனால் இன்று தாமதமாக தற்போது தொடங்கியள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடுபுதூர் என்ற இடத்தில் மத்தியகுழு ஆய்வு பணியை தொடங்கியவதற்கு முன்பாக அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கிராமப்புறங்களில் அதிக அளவு சேதம் இருப்பதால் அது தொடர்பான பார்வையிடுவது போன்றவைகள் இல்லாமல் தொடர்ந்து சாலை ஓரம் மட்டுமே சென்று பார்த்து செல்கிறார்கள் எனவே கிராம உட்புற பகுதிகளுக்கு வந்து இங்கு ஏற்பட்ட பலத்த சேதத்தை அவர்கள் பார்வையிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தற்போது இருக்கக்கூடிய மக்களை காட்டிலும் கூடுதலாக இரட்டிப்பாக போலீஸ் பாதுகாப்பு உதவியுடன் மத்திய குழு தற்போது ஆய்வை தொடங்கியுள்ளது. இந்த குழு மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். சாலை ஓரம் சுமார் 100 மீட்டர் உள்பகுதிகளில் அவர்கள் ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக பார்வையிடுங்கள் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழ்நிலையியில் பல்வேறு எதிர்ப்புகளின் மத்தியில் மத்திய குழு தனது ஆய்வை தொடங்கியுள்ளது. ஒரத்தநாடுபுதூர் என்ற இடத்தில் தொடங்கிய இந்த ஆய்வானது அடுத்தகட்டமாக பட்டுக்கோட்டை, மல்லிப்பட்டினம் கடற்கரை பகுதிகள் போன்ற இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். அதேபோல திருவாரூர் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு பணியாது தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் பிறகு கஜா புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை தயார் செய்து நவ., 27 க்கு பிறகு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஆய்வு குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார். அவர்களின் அறிக்கையில் கூறி உள்ளபடி மத்திய அரசு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழக அரசுக்கான நிதியை ஒதுக்கும் என்று கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : group examination ,storm ,Thanjavur ,Ghaz , Gajah Storm, Damage, Second Day, Central Committee, Tanjore, Study
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...