படம் மாட்ட சுவரில் ஆணி அடித்த போது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாப பலி

சென்னை: சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஆனந்தபாபு (33). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் மாலை புகைப்படம் மாட்ட வீட்டின் சுவரில் ஆணி அடித்துள்ளார். அப்போது, சுவருக்குள் அமைக்கப்பட்டிருந்த மின்சார ஒயரை ஆணி கிழித்துள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து ஆனந்தபாபு தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த வீட்டில் இருந்த அவரது உறவினர்கள், ஆனந்தபாபுவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஆன்ந்தபாபுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>