×

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசின் பணி திருப்தியாக இல்லை : திருநாவுக்கரசர் காரசார பேட்டி

சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இருந்து நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி சென்றார். அவர், அளித்த பேட்டி: நான் டெல்லிக்கு எதற்காக செல்கிறேன் என்பதை, வேலையை முடித்துக் கொண்டு திரும்பும்போது கூறுகிறேன். கஜா புயல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக முதல்வர் எடப்பாடி கூறியிருக்கிறார். ஆனால், அவர் அரசியல் செய்யவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியையோ, முதல்வரையோ எப்போதும் வாழ்த்தி பேசிக் கொண்டு இருக்க முடியாது.

தமிழக அரசு எதையும் செய்யாமல், வெறும் வெற்று அறிவிப்பை மட்டும் வெளியிடுகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களை, மத்திய அரசும் கண்டு கொள்ளவில்லை. மாநில அரசின் பணியும் திருப்திகரமாக இல்லை. இதனால், மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். எனவேதான், ஆங்காங்கே பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல் செய்கின்றனர். இவ்வா அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state government ,areas ,interview ,storm ,Thirunavukkarar Karkara , state government's work, not satisfactory ,areas affected, ghaj storm,Thirunavukkarar Karkara interview
× RELATED மின்னணு தேசிய வேளாண் சந்தை நடைமுறை...