×

கஜா புயல் காரணமாக சேதமடைந்த 45 லட்சம் தென்னை மரங்களுக்கும் இழப்பீடு : அமைச்சர் உறுதி

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கஜா புயலால் 1,419 படகுகள் முழுவதுமாகவும், 2,625 படகுகள் பகுதியாகவும் சேதம் அடைந்து இருக்கின்றன. 88,102 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. நெற்பயிர் 32,706 ஹெக்டேர் பரப்பளவில் சேதம் ஏற்பட்டு இருக்கிறது.தென்னை மரங்கள் மட்டும் 30,100 ஹெக்டேர் பரப்பளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு ஹெக்டேருக்கு 150 முதல் 175 தென்னை மரங்கள் நடப்பட்டு இருக்கும். ஊடுபயிர் இருக்கும் பட்சத்தில் தென்னை மரங்களின் எண்ணிக்கை குறையும். தோராயமாக ஒரு ஹெக்டேருக்கு 150 தென்னை மரங்கள் என்று கணக்கிட்டால் 30,100 ஹெக்டேர் பரப்பளவில் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த மரங்களுக்கு முதல்வர் அறிவித்தபடி இழப்பீடு வழங்கப்படும். குறுகிய காலஅவகாசத்துக்குள் மீட்பு பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மெழுகுவர்த்தி வழங்குவதை விட மின்சாரம் கொடுப்பது தான் எங்களுடைய இலக்கு. நகர பகுதிகளில் மின்சாரம் விரைவாக கொடுக்கப்பட்டுவிடும். கிராமப்புற பகுதிகளில் மின்சாரம் வழங்குவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆகும். நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்கு யாருக்கும் எந்த தடையும் கிடையாது.

மரங்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதோடு, புதியதாக மரங்கன்று வழங்கி, அதை பராமரிக்கவும் முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார். நில இழப்பீட்டில் மரங்களுக்கு கொடுக்கும் நிவாரண தொகையை புயல் பாதிப்பால் சேதம் அடைந்த மரங்களுக்கு வழங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நில இழப்பீட்டில் புதியதாக மரக்கன்று நடமுடியாது. நிலத்தையும் அரசு எடுத்துக்கொள்ளும். எனவே அதையும், இதையும் ஒப்பிட்டு விவசாயிகளை குழப்பக்கூடாது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க விருப்பம் தெரிவிக்கும் தனியார்கள், நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றும் வழங்கலாம். அல்லது அரசு சார்பில் அதற்கான அதிகாரிகளிடமும் ஒப்படைக்கலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Ghaz , Compensation, 45 lakh coconut trees ,damaged, Gaja storm
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...