×

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும் : முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: கஜா புயல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசின் நிவாரண நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும். புயல் நிவாரண நடவடிக்கைகளுக்காக மாநில அரசு உடனடியாக 1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது போதுமானதல்ல. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாகுபாடில்லாமல் நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தென்னை மரங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் மறுவாழ்வு அமைத்துக் கொள்ளும் நம்பிக்கை அளிக்கவில்லை. இதனால் தென்னை விவசாயி சுந்தரராஜன் வாழ்க்கை இழந்த துயரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். புயலால் சேதமடைந்த வீடுகளை பாகுபடுத்தி பார்ப்பது சரியல்ல.அரசு நிவாரண உதவிகளை மறுபரிசீலனை செய்து அனைவருக்கும் உதவிட வேண்டும். படகுகள், வலைகள் உள்ளிட்ட உடமைகளை இழந்து நிற்கும் மீனவர்களுக்கு, வேலையிழந்து நிற்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம்  வழங்கப்பட வேண்டும். மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரையிலும் குடிநீர், பால், மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : districts ,Muthrasan ,Ghaziabad , Need to speed up relief operations , affected districts ,Ghaziabad, Emphasis on Muthrasan
× RELATED தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில்...