×

மரக்காணத்தில் கடல் சீற்றம் காரணமாக 3,000 ஏக்கர் உப்பளம் தண்ணீரில் மூழ்கியது

மரக்காணம்: மரக்காணத்தில் கடல் சீற்றம் காரணமாக சுமார் 3,000 ஏக்கர் உப்பளம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மரக்காணத்தில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் தண்ணீரில் மூழ்கிய உப்பளங்கள் ஏரி போல் காட்சி அளிக்கிறது. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் 19 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

இதன் காரணமாக 1500 நாட்டுபடகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன. மழை காரணமாக மரக்காணத்தில் 3000 ஏக்கர் உப்பளம் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் சுமார் 2000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இன்றும் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 3,000 acres,Saltern,drowned,water,Sea outrage
× RELATED வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 322...