×

பேரையூர் பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த சிறுவத்து காளான் விற்பனை: வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே விளையும்

பேரையூர்: பேரையூர் பகுதிகளில் வருடத்திற்கு ஒருமுறை விளையும் அபூர்வ மருத்துவ குணம் கொண்ட சிறுவத்து காளான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் வடகிழக்கு பருவமழை மற்றும் கஜா புயலால் மழை பெய்தது. இந்த மழையால் மானாவரி நிலங்களில் கீரை வகைகள், காளான் போன்றவைகள் முளைத்து வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த அபூர்வ காளான் முளைத்துள்ளன. இதனை சேகரித்து மக்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து மல்லப்புரம் அய்யம்பட்டியை சேர்ந்த சுந்தரம் கூறுகையில், ‘மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் மிகவும் அரிதாக கிடைக்கும் சிறுவத்து காளான் முளைத்துள்ளது.  ஈசல் புற்றிலிருந்து முளைக்கக்கூடிய இந்த காளான் புதரில் கொத்தாகவும், மற்ற இடங்களில் ஒன்றிரண்டாகவும் கிடைக்கும். மற்ற சாதரண காளான்களை விட இரண்டு மடங்கு நன்மை தரக்கூடியது. வருடத்திற்கு ஒரு மட்டுமே கிடைக்கும்.

காலையில் முளைத்து மாலையில் மலர்ந்து வீணாகி விடும். இந்த இடைப்பட்ட நேரத்தில் இந்த காளானை தேடி பிடித்து பறிக்க வேண்டும். காட்டுப்பகுதியில் காளான் கொண்டை மட்டுமே மேலாக தெரியும். அதனை பறிக்கும் போது வேரும் சேர்ந்து வரும். இதில் எந்த பகுதியும் வீணாகாது. நேற்று எனக்கு 4 கிலோ காளான் கிடைத்தது. இதனை பேரையூர் கொண்டு வந்து விற்று செல்கிறேன். கிலோ ரூ.200க்கு விற்பனையாகிறது. செலவு போக ரூ.500 மிச்சம் கிடைக்கிறது. காளானை சமைத்து சாப்பிடாலம். ருசியாக இருக்கும்’ என்றார். காளானின் மருத்துவ குணம் பற்றி சித்த மருத்துவர் மதுரை செய்யது இப்ராஹிம் கூறுகையில், ‘இந்த காளானில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. நுரையீரல் செயல்பாடு, எலும்பு வலிமைக்கு உதவும். ரத்த அழுத்தம், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்தும். இந்த காளான் கிடைப்பது அரிதாகும்’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Periyur ,area , Peraiyur,clinical, Sale,baby mushrooms
× RELATED கொடைக்கானல் அருகே கல்லாறு என்ற ஆற்றை...