×

கைசிக துவாதசியையொட்டி திருப்பதி கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்றது ஆஸ்தானம்

திருமலை: திருமலையில் கைசிக துவாதசியையொட்டி இன்று காலை வெகு விமரிசையாக ஆஸ்தானம் நடைபெற்றது. இன்று கைசிக துவாதசியையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஏழுமலையான் கோயில் கருவறையில் உள்ள உக்ர சீனிவாசமூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவியுடன் வலம் வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். ஆண்டுக்கு ஒருமுறை கைசிக துவாதசி அன்றும் மட்டும் உக்ரசீனிவாசமூர்த்தி கோயிலை விட்டு வெளியில் வருவார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி அன்று ஏழுமலையான் கருவறையில் உள்ள உக்ரசீனிவாசமூர்த்தி சூரிய உதயத்துக்கு முன் மாட வீதியில் வலம் வருவது வழக்கம். மகா விஷ்ணு ஆஷாட மாதத்தில் ஏகாதசி அன்று நித்திரைக்குச் செல்ல இருப்பதால், கார்த்திகை மாதம் வரக்கூடிய கைசிக துவாதசி அன்று நித்திரையில் இருந்து மகாவிஷ்ணு கண்விழித்து எழக்கூடிய நாளாக கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து மகா விஷ்ணுவின் அவதாரமாக விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு வேங்கடேஸ்வர சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சூரிய உதயத்துக்கு முன் அவர் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டார். அதற்குப் பின், உக்ரசீனிவாசமூர்த்தியை தங்க வாசல் அருகில் அமர வைத்து அவருக்கு தூப, தீப, நைவேத்தியங்கள், பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்டவை சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. பின் அர்ச்சகர்கள் நட்சத்திர ஆரத்தி, கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி எடுக்கப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kasiika Dada ,Tirupati temple , Thirumalai, Kaisikha Dudhasi, Ezhumalayyan Temple
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...