×

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் 63 நாயன்மார்கள் வீதியுலா : பள்ளி மாணவர்கள் சுமந்து சென்றனர்

திருவண்ணாமலை: இறைவனின் திருவிளையாடல்கள் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சிவநெறியில் நிலைத்து நின்ற பெருமைக்குரியவர்கள் 63 நாயன்மார்கள். சைவத்தை வளர்த்ததிலும், சைவத்தின் வழியாக தமிழ் வளர்த்ததிலும் நாயன்மார்களின் தொண்டு சிறப்பு மிக்கது. எனவே, சிவாலயங்களில் நாயன்மார்க்களின் வழிபாடு என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதன்படி, எந்நாட்டவர்க்கும் இறைவனாம் தென்னாடுடைய சிவபெருமான், அண்ணாமலை எனும் அருள்நாமத்தில் அரசாளும் திருவண்ணாமலை கோயிலில், தீபத்திருவிழாவின் 6ம் நாள் உற்சவத்தில் நாயன்மார்களுக்கு சிறப்பு செய்யப்படுவது வழக்கமாகும்.

அதன்படி, தீபத்திருவிழாவின் 6ம் நாள் உற்சவமான நேற்று சமயக்குரவர் நால்வர் என போற்றப்படும் திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்மந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் பிரத்யேகமான தனி வாகனத்திலும், மற்ற நாயன்மார்கள் தனித்தனி வாகனங்களிலும் நேற்று மாட வீதியில் வலம் வந்து அருள்பாலித்தனர்.
அப்போது, ஏராளமான பக்தர்கள் மாட வீதியில் திரண்டிருந்து நாயன்மார்களை தரிசனம் செய்தனர். 63 நாயன்மார்களின் திருவீதியுலா வாகனங்களையும், பள்ளி மாணவர்கள் தங்கள் தோளில் சுமந்துச் சென்றது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. நாயன்மார்களின் வீதியுலாவை முன்னிட்டு, மாட வீதியின் பல்வேறு இடங்களில் அன்னதானம், மோர், பால் வழங்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nayanmars ,road ,Thiruvannamalai Karthikai Deepaviraveyavu: School , Thiruvannamalai, Deepathiruvila, Nayanmars
× RELATED குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக்...