×

புலியை தான் பிடிக்க வேண்டுமே தவிர எலியை பிடிக்க கூடாது: சி.எச்.வெங்கடாச்சலம், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர்

மத்திய அரசாங்கம் பணமதிப்பிழப்பை அறிவித்தது ஒரு சில குறிக்கோள்கள் என்று கூறினார்கள். அதாவது, கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும். வரி ஏய்ப்பை தடுக்க வேண்டும். இந்த இரண்டு வருடத்தில் அவர்களது குறிக்கோள்  நிறைவேறி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பணமதிப்பிழப்பு சமயத்தில், நாட்டில் 40 சதவீதம் கருப்பு பணம் உள்ளது. அந்த பணம் கணக்கிற்கு வராத பணம். இந்த திட்டத்தால் முடக்கப்படும் என்று கூறினர். இப்போது  எவ்வளவு பணம் முடக்கப்பட்டதோ அந்த பணம் அனைத்தும் ரிசர்வ் வங்கிக்கு வந்து விட்டதாக தனது அறிக்கையில் கூறியுள்ளது. அப்படியெனில் கருப்புப்பணம் எங்கே சென்று விட்டது. இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.  இதனால் என்ன பலன் அடைந்தீர்கள் என்று கூற வேண்டும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இன்று வரை பல சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணத்தை வைத்து தான் வியாபாரம் செய்து வந்தனர். சாதாரண ஏழை மக்களும் பணம் கையில் வைத்திருக்கக்  கூடாது என்றும், வங்கி கணக்கு மூலம் தான் வரும் என்று கூறினால் என்ன நியாயம். புலியை தான் பிடிக்க வேண்டுமே தவிர எலியை பிடிக்கக்கூடாது. ₹500, ₹1000 நோட்டுகள் பெரிய அளவில் கருப்பு பணம்  வழிவகுப்பதாக கூறினர். அப்படியெனில் எதற்கு ₹2 ஆயிரம் நோட்டை வெளியிட்டார்கள். இதன் மூலம் இன்னும் அதிகமாக பதுக்க முடியுமே.
கருப்பு பணத்ைத ஒழிப்பது என்பது ஒரு பித்தலாட்டம் தான். பணமதிப்பிழப்பு சாதாரண ஏழை எளிய மக்களுக்கு தான் பிரச்னையை ஏற்படுத்தியது. ஒட்டு மொத்தமான தோல்வி. அரசாங்கத்தின் தவறான பொருளாதார  கொள்கையின் ஒரு பகுதி தான் இந்த ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு.

 பழைய நோட்டுக்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்டது. அதனை எண்ணி வைக்க வேண்டும். அதற்கே 2 ஆண்டுகள் ஆகி விட்டது. மறுபடியும் புதிய நோட்டுக்களை அச்சிட்டு விட்டனர். ரிசர்வ் வங்கிக்கு இரண்டு  செலவு தான் ஏற்பட்டுள்ளது.
 தற்போது  வங்கிகளில் நிர்பந்தபடுத்தி ஏடிஎம் அட்டைகளை தருகின்றனர். தற்போது பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பழைய ரூபாய் நோட்டுக்களை வைப்பது போன்று தான் கருவி உள்ளது. இந்தியாவில் 3 லட்சம் ஏடிஎம்  மையங்கள் உள்ளது. இதில், பாதி தான் இயங்குகிறது. காரணம், புதிய ரூபாய் நோட்டு வைப்பதற்கான இயந்திரம் 1 லட்சத்து 60 ஆயிரம் மையத்தில் தான் வைத்துள்ளனர். இந்த ஏடிஎம் மையங்களில் கருவியை மாற்றுவதற்கும்  செலவு ஏற்பட்டுள்ளது. இதை மாற்றாமல் இருப்பதால் பல ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் இப்போதும் திண்டாடி வருகின்றனர்.

 சாதாரண மக்கள், ரூபாய் நோட்டுக்களை திடீரென ரத்து செய்வார்களோ என்ற பயத்தில் தான் உள்ளனர். அவர்களால் சந்தோஷமாக பண்டிகைகளை கூட ெகாண்டாட முடியவில்லை. பண்டிகை கால வியாபாரங்கள்  படுத்துவிட்டன.   கருப்பு பணம் இந்தியாவில் ரொக்கமாக உள்ளது. நான்கு சதவீதம் மட்டுமே ரொக்கமாக உள்ளது. மீதி கருப்பு பணம் பினாமி சொத்துக்களாகவும், தங்ககட்டிகளாகவும், வெளிநாட்டு கரன்சியாகவும் மாறி உள்ளது. 4 சதவீத கருப்பு  பணத்தை தடுப்பேன் என்று கூறி 96 சதவீத பணத்தை முடக்கம் செய்து, அதிலும் தோல்வி அடைந்ததை இந்த அரசாங்கத்தின் தவறான செயல்பாடாகத்தான் பார்க்கத் தோன்றுகிறது.

500, 1000 நோட்டுகள் பெரிய அளவில் கருப்பு பணம் வழிவகுப்பதாக கூறினர். அப்படியெனில் எதற்கு 2 ஆயிரம் நோட்டை வெளியிட்டார்கள். இதன் மூலம் இன்னும் அதிகமாக பதுக்க முடியுமே.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : General Secretary ,India Bank Employees Federation , tiger ,CH Veeragandalam, General Secretary, All India Bank ,Employees Federation
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...