×

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் அதிகாரிகள் சிறைபிடிப்பு: அரசு வாகனங்களுக்கு தீ

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டது, அரசு வாகனங்கள் கொளுத்தப்பட்டது தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த கீரமங்கலத்தில், புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை கணக்கெடுக்கச் சென்ற வேளாண் அதிகாரிகளிடம், பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், தங்கள் வீடுகளையும் கணக்கெடுக்குமாறு கூறி அவர்களை சிறைபிடித்தனர். தகவலறிந்து, ஆலங்குடி வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார்,  ஆலங்குடி டிஎஸ்பி அய்யனார் ஆகியோர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில், கொத்தமங்கலத்தில்  வட்டாட்சியர் ரெத்தினாவதியை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனர்...இதனால் அவரை மீட்க முயன்ற காவல்துறையினரோடு ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியது. அப்போது அதிகாரிகள் மீது கற்கள் வீசப்பட்டதில், ஆலங்குடி டிஎஸ்பி தலையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அதிகாரிகள் சென்ற 5 அரசு ஜீப்புகளையும் சிலர் தீவைத்து எரித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில்  கொத்தமங்கலம் கிராமத்திற்குச் சென்ற 300க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார், தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். மேலும் தீவைப்பு மற்றும் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வீடுவீடாகச் சென்று தேடும் பணியிலும் போலீசார் இறங்கி உள்ளனர். இந்நிலையில்  ஆலங்குடி அருகே வடகாடு பகுதிகளிலும் பொதுமக்களும் இளைஞர்களும் சாலைகளில் அப்புறப்படுத்தப்பட்ட மரக்கிளைகளை மீண்டும் தூக்கிப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : district ,Kothamangalam ,Pudukottai ,Alangudi , Officers,Kothamangalam, Alangudi,Pudukottai
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்