×

4 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்தன டெல்டாவில் 2.35 லட்சம் ஏக்கரில் நெற்பயிர் பாதிப்பு

நாகை: கஜா புயலால் டெல்டாவில் 2.35 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்பாதிக்கப்பட்டது. 4 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்தன. டெல்டாவில் கஜா புயலால் நாகை மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் சம்பா தாளாடி சேதமானது. பணபயிரான மா, தென்னை, முந்திரி 5 லட்சம் மரங்கள் வேறோடு சாய்ந்தது. இதனை நம்பி இருந்த 10 ஆயிரம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 35 ஆயிரம் ஏக்கரில் சூழ் பிடிக்கும் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் சேதமானது. 8000 ஆயிரம் மின்கம்பங்கள், 466 வீடுகள் முழுமையாக சேதமாகி உள்ளது. 116 வீடுகள் லேசாக சேதமாகி உள்ளது. 90 கால்நடைகள் இறந்துள்ளன. 36 துணைமின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்தது. 10 ஆயிரம் ஏக்கரில் வாழைகள் சேதமானது.

3 நாட்களாக மின்சாரம் இல்லாததால் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்டம் விவசாய பகுதி இல்லை என்றாலும் திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி பகுதியில் பணபயிர்களான 5 ஆயிரம் ஏக்கரில் தேக்கு, பலா, மா, கொய்யா, வாழை போன்ற மரங்கள் சாய்ந்து விழுந்தன. அறந்தாங்கியில் 8 ஆயிரம் தென்னை மரங்கள், 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு பலகோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : slope , Coconut trees, delta and rice
× RELATED முத்துநகர் பூங்காவை எம்.பி. கனிமொழி...