×

பொறியாளர்கள், பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்சியாளர்கள் குழு இன்னும் நியமிக்கப்படவில்லை: முதல்வரிடம் பொறியாளர் சங்கம் புகார்

சென்னை: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும்  பொறியாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் தனியே ஒரு பயிற்சி நிறுவனம் அமைக்கப்பட்டு பயிற்சிகள் திறம்பட வழங்க அரசு முடிவு செய்து, அதற்கான அரசாணை 2013ம் ஆண்டு வெளியிடப்பட்டு நெடுஞ்சாலை ஆராய்ச்சி  நிலைய வளாகத்தில் சுமார் ரூ.15 கோடி செலவில் பயிற்சி கட்டிடம் ஒன்றும் விடுதி கட்டிடம் ஒன்றும் கட்டும் பணிகள் 2016 ஆண்டு நிறைவு பெற்றுள்ளன.ஆனால், பயிற்சி தொடர்பாக பாடத்திட்டங்கள் வகுப்பதற்கும்  பயிற்சியாளர்கள் குழுவினை இறுதி செய்வதற்கும் உரிய அலுவலர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.

எனவே, பயிற்சிகளுக்கென்று தனியே ஓர் அலகு தோற்றுவிக்க வேண்டும். கண்காணிப்பு பொறியாளர் நிலையில் இணை இயக்குனர் 1, கோட்ட பொறியாளர் நிலையில் துணை இயக்குனர் (நிர்வாகம்) 1, கோட்ட பொறியாளர்  நிலையில் துணை இயக்குனர் (பாட திட்டம்) 1, உதவி கோட்ட பொறியாளர் நிலையில் உதவி இயக்குனர்கள் (பயிற்சி) 10, உதவி பொறியாளர் நிலையில் பயிற்சியாளர்கள் (20), சார்நிலை பணியாளர்கள் 25 பேர் வரை  நியமிக்கலாம். இவர்களுக்கு ஊதியம் ஆண்டு ஒன்று ரூ.4.25 கோடி மட்டுமே ஆகும். இந்த தொகை நெடுஞ்சாலைததுறை ஆராய்ச்சி நிலையம் பல்வேறு சோதனைகளை செய்வதற்காக வசூலிக்கும் கட்டணமான ரூ.20 கோடியில்  ஒரு சிறு பகுதி ஆகும். எனவே, பயிற்சிக்கென்று ஓர் அலகினை நெடுஞ்சாலைத்துறையில் தோற்றுவித்து ஆணை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு–்ள்ளது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : team ,trainers ,Chief Minister ,Engineer's Association , Engineers, Staff, Trainers, Chief, Engineer Association, Complaint
× RELATED உலக ஸ்குவாஷ் இந்திய அணி விலகல்