×

நடிகை அக்‌ஷரா ஹாசன் அந்தரங்க படங்களை வெளியிட்டது நடிகை மகன்?: போலீஸ் புகாரால் ரகசியம் அம்பலம்

சென்னை: நடிகை அக்‌ஷரா ஹாசன் உள்ளாடையுடன் இருக்கும் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டவர் அவரது முன்னாள் பாய் பிரெண்டும், நடிகை ரதி அக்னிஹோத்ரியின் மகனுமான தனுஜ் விர்வானி என்ற  தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், உள்ளாடை மட்டுமே அணிந்து செல்பி எடுத்துக்கொண்ட கவர்ச்சிப் படங்கள் சில நாட்களுக்கு முன்  இணையதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த அக்‌ஷரா ஹாசன், மும்பை போலீசில் புகார் அளித்தார். தற்போது இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனுஜ் விர்வானி கூறியதாவது: அக்‌ஷராவும், நானும் காதலித்தபோது எதுவும் ஆபாசமாக பேசியது கிடையாது. நெருக்கமான உறவை பயன்படுத்தி, சிலரது அந்தரங்கத்தை என் ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கொள்ளும்  ஆள் நானில்லை. அக்‌ஷராவுக்கு இதுபோல் ஒரு சம்பவம் நடந்ததை அறிந்து அப்செட் ஆனேன். நாங்கள் ஒருவரையொருவர் காதலித்தபோது, அக்‌ஷராவை பாதுகாப்புடன் கவனித்துக்கொண்டேன். இருவரும் பிரேக்அப்  செய்துகொண்டு பிரிந்த பிறகும் அதே பாதுகாப்பு உணர்வை அக்‌ஷரா மீது நான் வைத்திருக்கிறேன்.அக்‌ஷராவும், நானும் ஒன்றாக இருந்தபோது, இருவரும் எங்களது அந்தரங்க புகைப்படங்களை பரிமாறிக்கொண்டது உண்மைதான்.  அப்போது, இருவரும் ஒருநாள் பிரியப்போகிறோம் என்று நினைத்தது கிடையாது. அவரது அந்தரங்க படங்கள் என் செல்போனில் இருந்தது.

அதுபோல், எனது அந்தரங்க படங்கள் அவரது செல்போனில் இருக்கும். அக்‌ஷராவின் அந்தரங்க படங்கள் எனக்கு வந்ததும், அதை நான் முழுமையாக அழித்துவிட்டேன். ஆனால், தொழில்நுட்ப திருட்டு நடந்திருக்கிறது. எனவே,  என் செல்போனில் இருந்துதான் அக்‌ஷரா படங்கள் வெளியானது என்ற கேள்விக்கே இடமில்லை. தற்போது நாங்கள் ஆபத்தான தருணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தனிப்பட்ட முறையில் என் மதிப்பை பல வருடங்களாக  பாடுபட்டு உயர்த்தி இருக்கிறேன். நான் ரொம்பவும் அப்பாவி. இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அக்‌ஷரா என்னை ெதாடர்புகொண்டு, செல்போனை ரிப்பேருக்கு கொடுத்தாயா என்று கேட்டார். அவரது அந்தரங்க  படம் வெளியானதற்கு நான் காரணமில்லை என்பதை அக்‌ஷராவே அறிந்துள்ளார். உண்மை என் பக்கம் இருக்கிறது. என்னிடம் போலீஸ் விசாரணை குறித்து எந்த தகவலும் வரவில்லை. அப்படி அழைத்து கேட்டால், போலீசாரிடம்  உரிய பதில் அளிப்பேன். ஏனெனில், என்னிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Akshara Hassan , Actress Akshara Hassan, Indoor film, actress son, police, secret report
× RELATED ஓடிடியில் வெளியாகும் அக்‌ஷரா ஹாசன் படம்