×

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் தொலைபேசியில் பேச்சு: கஜா புயல் பாதிப்பை கேட்டறிந்தார்

சென்னை: கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி கேட்டிறிந்தார். மேலும், மக்கள் இயல்பு வாழ்க்கைக்க திரும்ப தேவையான அனைத்து உதவிகயைும் செய்வதாக உறுதியளித்துள்ளார். வங்க கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தை மிரட்டி விட்டு சென்றது. இதனால் 5 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்து அங்குள்ள மக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். அரசு மீட்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறது. இந்தநிலையில், புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி நேற்று இரவு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
அப்போது முதல்வர் தமிழகத்தில் சேதமடைந்த மின்கம்பங்கள், உயிரிழந்த மக்கள், காயமடைந்தவர்கள், சேதமடைந்த விவசாய நிலங்கள், மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிவாரணம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

இதை கேட்டு மிகவும் வருத்தமடைந்த பிரதமர், முதல்வருக்கு ஆறுதல் கூறி, மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளுக்கான அனைத்து உதவிகளும் மத்திய அரசு செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதி அளித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிராத்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு விரைவில் நிவாரண தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Edappadi Palanisamy ,storm ,Khajah , Chief Minister Edappadi Palinasamy, Prime Minister, Ghazi Storm
× RELATED மும்பையை சூறையாடிய புழுதிப்புயல்...