×

ஏ.ஆர்.ரஹ்மானுடன் டிவிட்டர் சிஇஓ சந்திப்பு

சென்னை: டிவிட்டர் சிஇஓ ஜேக் டோர்சே, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை நேற்று சந்தித்து பேசினார். இந்தியா வந்துள்ள டிவிட்டர் சிஇஓ ஜேக் டோர்சே, அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்தார். அப்போது டிவிட்டரில் மேற்கொள்ள இருக்கும் மாற்றங்கள் குறித்து அவர் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரஹ்மான் கூறும்போது, ‘ஜேக் டோர்சே உடன் நடந்த சந்திப்பு எனக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது’ என தெரிவித்துள்ளார். மேலும் ஜேக்குடன் அமர்ந்திருக்கும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ரஹ்மான் வெளியிட்டிருக்கிறார். இந்தி நடிகர் ஷாருக்கானையும் ஜேக் நேற்று சந்தித்து பேசியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Twitter ,CEO ,AR Rahman , Twitter CEO , AR Rahman
× RELATED ஷகிரா மாதிரி யோசி… பியான்சே போல பாடு!