×

கஜா புயல் கரையை கடக்கும் போது சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் : மின்துறை அமைச்சர் தங்கமணி

சென்னை : வங்க கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் இன்று மாலை அல்லது நள்ளிரவு  கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 80 முதல் 90கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் , புதுச்சேரியில் உள்ள 7மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புயலின் எதிரொலியால் பல்வேறு பல்கலைக்கழக மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புயல் கரையை கடக்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பத்தப்பட்ட மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாகை, தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை , ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக மின்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதியில் தங்க வைத்து வேண்டிய நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : districts ,storm ,Minister of Power ,Ghaz ,Goldman ,border , Gaja Cyclone, gaya storm, gaja cyclone update,Power off,
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...