×

குழந்தைகள் தினம் டிடிவி.தினகரன் வாழ்த்து

சென்னை:  அமமுக துணை பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் அறிக்கை: குழந்தை செல்வங்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சியின், அப்பழுக்கற்ற அன்பின் அடையாளங்களாக திகழும் குழந்தைகளே இவ்வுலகத்தின் எதிர்காலம். இறைவனின் அருட்கொடையாய் திகழும் குழந்தைகளுக்கு உரிய நல்ல சமூகத்தையும், ஆரோக்கியமான சுற்றுச் சூழலையும் சிறந்த கல்வியையும் ஏற்படுத்தித் தரவேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.

எம்.ஜி.ஆர் குழந்தைகளின் அறிவுத்தேடலுக்கு, பசி ஒரு தடையாய் இருந்திடக்கூடாது என்பதை உணர்ந்து சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தார். குழந்தைகளுக்கெதிரான கொடுமைகளை எக்காலத்திலும் எவ்விடத்திலும் நடைபெறாத நிலையை படைத்திட இந்நன்னாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு கூறி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Children's Day Dt.Dinakaran , Children's Day ,TTV.Dinakaran greets
× RELATED கடலில் கலந்து மழைநீர் வீணாவதை தடுக்க...