×

பாஜ ஆபத்தான கட்சி? நடிகர் ரஜினி தடாலடி பதில்

சென்னை: பாஜ ஆபத்தான கட்சி என எல்லோரும் நினைப்பதால், அப்படித்தானே இருக்க முடியும் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டார். நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை 3.45 மணி விமானத்தில் பெங்களூரில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்தபேட்டி:

நான் சொல்வதற்கு என்னிடம் எந்த தகவலும் இல்லை. நீங்கள் எதாவது கேட்க வேண்டும் என்றால் கேளுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் பேட்டியை தொடங்கினார்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு அனுப்பிய கடித்தத்தை மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவர் கவனத்துக்கே கொண்டு செல்லாமல் இவர்களே முடிவெடுத்தது பற்றி என்ன கூறுகிறீர்கள்?
எந்த 7 பேரை பற்றிக்கேட்கிறீர்கள் ?
அதற்கு நிருபர்கள், ராஜிவ் காந்தி கொலை வழக்கு பற்றித்தான் கேட்கிறோம்.
அப்படியா? அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலையில் உங்களுடைய நிலைபாடு என்ன?
இப்போது தான் இதை நீங்கள் கேட்கிறீர்கள். அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
தர்மபுரியில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கழுத்து அறுத்து கொலை செய்யபட்ட சம்பவம் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
இதுபோன்ற குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். அதற்கான சட்டம் கொண்டு வரவேண்டும். சட்டம் கொண்டு வந்தால் மட்டும் போதாது அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
பண மதிப்பிழப்பு நடந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அது பற்றி உங்கள் கருத்து என்ன?
அதை நடைமுறைப்படுத்திய விதம் தவறானது. அதுபற்றி இங்கு நின்று பேச முடியாது. அது பற்றி விரிவாகத்தான் பேச வேண்டும்.
7 பேர் விடுதலைக்கு நீங்கள் ஏதாவது வலியுறுத்துவீர்களா?
அது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
பாஜ அரசுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து ஒரு மிகப்பெரிய கூட்டணியை ஏற்படுத்துகின்றனர். பாஜ அந்த அளவுக்கு ஆபத்தான கட்சியா?
எல்லோரும் அப்படித்தான் நினைக்கிறார்கள். அதனால அப்படித்தானே இருக்க முடியும்.
இவ்வாறு ரஜினி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,Rajini Dhalaladi , Bhaj, the actor Rajini
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...