×

2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீப கொப்பரை சீரமைப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகாதீப கொப்பரை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன்பின், விழா 10 நாட்கள் நடைபெறும்.  
20ம் தேதி மகா தேரோட்டம், 23ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலையில் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இந்த கொப்பரை வெண்கலத்தால் ஆன 5 அடி உயரமுடையது.

இந்த கொப்பரையை தீபத் திருவிழா தொடங்குவதற்கு முன்பு  சீரமைப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு தீப கொப்பரை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. கொப்பரை சீரமைக்கப்பட்டு வர்ணம் தீட்டி அர்த்தநாரீஸ்வரர் படம் வரையபடும். இதன்பின் தீப கொப்பரைக்கு கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்படும். அதன்பின், கொப்பரையை தலைச்சுமையாக மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mahadeep Koppara , Tiruvannamalai,Karthigai Deepam, Bharani Deepam, Maha Deepam
× RELATED 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீப கொப்பரை சீரமைப்பு