×

ஆப்கன் சென்று திரும்பிய கேரள இளைஞரிடம் விசாரணை : ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டதாக வாக்குமூலம்

டெல்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட கேரளாவை சேர்ந்த 26 வயது இளைஞர் நாஷிதுல் ஹம்சஃபர், ஐ.எஸ் தீவிரவாதிகள் பற்றி அதிர்ச்சி தகவல்கள் பலவற்றை தெரிவித்துள்ளார். 2013-ல் ஏமன் நாட்டு மத போதகர் அன்வர் அவ்லாக்கி உரையை மடிக்கணினியில் பதிவிட்ட ஹம்சஃபரை ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பு கொண்டு மூளை சலவை செய்துள்ளனர். இதனையடுத்து ஆப்கான் நண்பர்கள் சிலரின் யோசனையின் பேரில் 2017-ல் அக்டோபர் மாதம் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு ஹம்சஃபர் பயணித்துள்ளார்.

அங்கு இவரை அழைத்து சென்ற ஒருவர் அகதிகள் முகாமில் விட்டு தப்பிவிட்டார். அங்கு இருந்த ஹம்சஃபரை பாகிஸ்தானி என கருதி போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர். அப்போது தாம் ஒரு ஆப்கானிஸ்தான் அகதி என ஹம்சஃபர் பொய் சொன்னதால், அவரை ஆப்கன் எல்லையில் விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து காபூல் சென்ற ஹம்சஃபர் அங்கிருந்து ஐ.எஸ் அமைப்பின் உதவியை நாடியுள்ளார். அப்போது போலீஸாரிடன் சிக்கிய அவர், விசாரணையில் தாம் ஒரு இந்தியர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற விசாரணைக்கு பின் ஹம்சஃபர், இந்தியாவிற்கு திருப்பியனுப்பப்பட்டார். இந்த தகவல்களை அவர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kerala ,Afghanistan ,ISS , Afghanistan, Kerala Youth, Nashidul Hafsaffar, IS terrorists
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...