×

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சென்னையில் பொதுமக்களுடன் கலந்துரையாடல்: ராஜிவ் கவுடா, நாசே ஆர்.ராஜேஷ் பங்கேற்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்லையொட்டி காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக சென்னையில் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் 200 இடங்களில் மக்களின் கருத்துகளை கேட்டு, அதன் பின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. மேலும் இந்த மக்களின் கருத்துக்களை காங்கிரஸ் ஆட்சியின் போது பட்ஜெட் தயாரிக்கும் போது நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை தலைவர் ராஜிவ் கவுடா எம்பி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை தலைவர் நாசே ஆர்.ராஜேஷ், தமிழக ஒருங்கிணைப்பாளர் ஆண்டனி விஜிலேஷ் ஆகியோர் சென்னையில் மக்களின் குரல் என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் கல்வி, தொழில்துறை, வேளான்மை, வேலை வாய்ப்பு பிரிவில் உள்ள வல்லுநர்கள், நிபுணர்களுடன் கலந்துரையாடல் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள நாசே இலவச தொழிற்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

இதில் அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை தலைவர் ராஜிவ் கவுடா எம்.பி., மற்றும் நாசே தொண்டு நிறுவனத்தின் தலைவர் நாசே ஜெ.ராமச்சந்திரன், துணைத்தலைவர்  நாசே ஆர்.ராஜேஷ் மற்றும் ஜெ.பாலமுருகன், ஏ.ஜி.சிதம்பரம், கமலக்கண்ணன் மைதின் ராஜா. கமலக்கண்ணன், பழனியப்பன், பிரபு, ராஜேஷ், கார்த்திக், விஜயகுமார் அப்பு, பிருந்தா, ஜெகன், லட்சுமி தேவன், பூங்கொடி, சுரேஷ், லோகபிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,Chennai ,Rajiv Gowda , Congress, Election Statement, Chennai, Rajiv Gowda, Nase R. Rajesh
× RELATED திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கை...