×

தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் : சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு

சென்னை: தி.நகரில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. தி.நகரில் நடைபாதை வளாகம், பூங்கா சீரமைப்பு, எல்இடி விளக்குள் அமைக்கும் பணி மற்றும் மழைநீர் வடிகால் சீரமைப்பு, பல் அடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மந்தவெளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பூங்காவும் மெரீனா கடற்கரை அருகில் உள்ள நேப்பியர் பாலம் பின்புறம் போக்குவரத்து விதிகளை அறிந்து கொள்ளும் வகையில் போக்குவரத்து பூங்காவும் அமைக்கப்பட்டு வருகிறது.

தி.நகரில் நடைபெற்று வரும் நடைபாதை  வளாக பணிகளை  மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) கோவிந்த ராவ், மத்திய வட்டார துணை ஆணையர் சுபோத் குமார், போக்குவரத்து பிரிவு தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் சுதாகர், முதன்மை தலைமை பொறியாளர் புகழேந்தி, ஸ்மார்ட் சிட்டி நிறுவன முதன்மை செயல் அலுவலர் ராஜ் செரூபல் ஆகியோர் இருந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Smart City ,Inspectorate ,Chennai Corporation , T nagar, Smart City, Chennai Corporation
× RELATED பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில்...