×

அதிமுகவில் புதிய ‘குஸ்தி’ தொடங்கியது டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு வலைவீச்சு: எடப்பாடியின் ‘வியூகம்’ வெளியானதால் பரபரப்பு

சென்னை: இடைத்தேர்தல் தொடர்பாக தினகரனுக்கும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதை பயன்படுத்தி, அவர்களை தங்களது பக்கம் கொண்டுவர எடப்பாடி  தரப்பினர் வலைவீசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக முதல்வராகவுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் மனு அளித்த டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார். இதுதொடர்பாக தொடரப்பட்ட  வழக்கில், தகுதி நீக்கம் செல்லும் என நீதிமன்றம் கடந்த 25ம் தேதி உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என தினகரனும், அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதற்கு எதிர்மாறாக அமைந்தது. இதையடுத்து மேல்முறையீடு செய்வதாக அவர்கள் அறிவித்தனர். பிறகு ஏற்பட்ட குழப்பத்தால் திருவாரூர், திருப்பரங்குன்றம் சேர்த்து, 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சந்திக்க போவதாக அறிவித்தனர்.தற்போது மீண்டும் அமமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது வெற்றிவேல்,  செந்தில் பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன், பழனியப்பன் ஆகியோர் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறார்கள். மற்றவர்கள் இடைத்தேர்தலை சந்திக்க தயக்கம் காட்டுகின்றனர்.

மேலும் மேல்முறையீடு செல்வதற்கும் பணம் செலவாகும் என்பதால், அதற்கும் தயக்கம் காட்டுகின்றனர். தற்போது நடந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு செலவான தொகையில், தினகரன் குறைவான அளவே செலவு செய்துள்ளார்.  மாறாக மற்ற எம்எல்ஏக்களே கூடுதலாக செலவு செய்துள்ளனர். இதனாலேயே மேல்முறையீட்டிற்கு சென்றாலோ அல்லது தேர்தல் நடந்தாலோ அதற்கான ெதாகையை தினகரன் செலவு செய்வாரா என்ற சந்தேகம் அவர்களுக்கு  எழுந்துள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ள எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்களில் ஒருசிலரை தங்களது பக்கம் இழுக்க திட்டம் தீட்டி வருகின்றனர். இது தினகரன் காதை எட்டியிருக்கிறது.  இதனால் கட்சிக்குள் மீண்டும் ஒரு ‘குஸ்தி’ ஆரம்பித்திருக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK , AIADMK, TTV Dinakaran, MLA, Ettapadi, Strategy '
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...