×

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறு, குறு தொழில்கள் நலிவு: பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்

சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை பேரழிவில் முடிவடைந்து விட்டதாக பொருளாதார நிபுணர்கள் விமர்சித்துள்ளனர். பெரும் ஆரவாரத்துடன் மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடக்கடிகையின் முக்கிய நோக்கமான கருப்பு பணம் ஒழிப்பு மற்றும் கள்ள நோட்டு ஒழிப்பு என்ற நோக்கங்கள் சிறிதும் நிறைவேறவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். மாறாக சிறு, குறு மற்றும் அமைப்புசாரா தொழில்கள் நலிவடைத்ததால் நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ.40 கோடி சரிவடைந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். சிறு, குறு தொழில்கள் மட்டுமல்லாது, சில்லறை வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் நாடு முழுவதும் பல லட்சம் பேர் வேலை இழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் பணமதிப்பு நீக்கம் கொண்டு வரப்படத்திலிருந்து இன்று வரை பெரிய முன்னேற்றம் இல்லாததால், இளைஞர்களிடையே வேலை வாய்ப்பின்மை பிரச்சனை அதிகரித்துள்ளது. மொத்தத்தில் 200க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொடுத்து, கோடி கணக்கான மக்களை வங்கிகளின் முன்பு நாள் கணக்கில் காக்க வைத்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை அழிவுப்பாதைக்கு திருப்பியுள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கை படுதோல்வியில் முடிந்துள்ளதாக அவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : businesses ,economists , Monetary removal,small businesses,economists,criticism
× RELATED மக்களவை தேர்தல்: தமிழ்நாடு காங்கிரஸ்...