×

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுக்குறைந்து தாழ்வு பகுதியாக மாறி விட்டதால் தமிழகம், புதுவையில் கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வலுக்குறைந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுவதால் தென்தமிழகம் மற்றும் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் குமரிக்கடல் மற்றும் மத்திய இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை மறுநாள் அந்தமான் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fishermen ,sea ,coastline , Fishermen,sea,low atmosphere,southwest coastline,Weather Center,Warning
× RELATED கடலில் புதிய தூக்குப்பாலம் நிறுவும்...