×

விமானம் விழுந்த ஜாவா கடலில் மீட்பு பணியில் ஈடுபட்ட நீர்மூழ்கி வீரர் திடீர் பலி

ஜகர்தா: இந்தோனேசியா விமானம் கடலில் விழுந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட நீர்மூழ்கி வீரர் மூச்சு திணறலில் இறந்தார். இந்தோனேசியாவின் ஜகர்தா நகரில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்கால் பினாங் நகரத்துக்கு கடந்த 29ம் தேதி சென்ற லயன் ஏர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் ஜாவா கடலில் விழுந்தது. இதில், விமானத்தில் பயணம்  செய்த 189 பேரும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை தேடும் பணியில் இந்தோனேஷிய கடற்படை மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், விமான பாகங்களை மீட்பதற்காக நடைபெற்ற மீட்பு பணியில் இந்தோனேசியாவை சேர்ந்த நீர்மூழ்கி நிபுணர் சியாச்ருல் ஆன்டோ (48) என்பவரும் பங்கேற்றார். நேற்று முன்தினம் அவர் நீரில் மூழ்கியபோது, போதிய  காற்று இல்லாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தார்.இது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : airplane crash , plane fell , jaw sea, Rescue work ,involved The submarine,sudden
× RELATED ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்