×

தலைமை அர்ச்சகர் மரணத்தால் ஸ்ரீகாளஹஸ்தி கோயில் நடை திடீர் அடைப்பு

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலின் தலைமை அர்ச்சகர் திடீரென மரணம் அடைந்ததால், நடை அடைக்கப்பட்டது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காளஹஸ்தி சிவன் கோயிலின் தலைமை அர்ச்சகர் சதாசிவ குருக்கள் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதனால், காளஹஸ்தி சிவன் கோயிலில் காலை 10.30  மணி முதல் இரவு 7 மணி வரை நடை அடைக்கப்பட்டது. மேலும், ராகு, கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகளும் நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகள் செய்து, மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பின்னர், 9 மணி நேரத்துக்கு பின் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Srikalahasti temple ,Archcher ,death , Srikalahasti Lord Shiva Temple, Leadership, Death
× RELATED சேவல் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி: பிளக்ஸ் போர்டால் பரபரப்பு