×

மார்த்தாண்டம் மேம்பால கீழ் பகுதியில் தேங்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மார்த்தாண்டம் : டெங்கு, பன்றி காய்ச்சல் உட்பட பல வைரஸ் காய்ச்சல்கள் தற்போது பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இன்னலுற்று வருகின்றனர். குறிப்பாக பன்றி காய்ச்சல், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன. காய்ச்சல் பாதிப்பை கண்டறிவதற்காகவும், கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும் மாவட்டம் முழுவதும் 2,000 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மார்த்தாண்டத்தில் மேம்பால பணிகள் நடந்து வருவதால் பல இடங்களில் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி உள்ளது. மேலும் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பல பள்ளங்களிலும், பில்லர்களுக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ள பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவு மற்றும் மழைநீரை வெளியேற்றவோ, கொசு மருந்து தெளிக்கவோ, புகை அடிக்கவோ நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்த தண்ணீரில் இருந்து கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு காய்ச்சல் உட்பட நோய்கள் வேகமாக பரவும் ஆபத்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தேங்கும் மழைநீரை அகற்ற வேண்டும். மேலும், கொசு ஒழிப்பு பணியை முறையாக செய்வதோடு, அனைத்து பகுதிகளிலும் சுத்தம், சுகாதாரம் பேணப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rainstorm ,Marthandam , Risk of spreading ,rainwater , rainstorm ,lower part of Marthandam
× RELATED மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர்...