×

எல்லா திசைகளிலும் விலை ஏற்றத்தால் வீட்டுச்செலவுகளுக்கு கூட திண்டாடும் மக்கள்: சர்வேயில் தகவல்

புதுடெல்லி: சமீப காலமாக எல்லா  பக்கமும் விலைவாசி ஏற்றம் கண்டு வருவதால் நடுத்தர, ஏழை மக்கள்  விழி பிதுங்கி உள்ளனர் என்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆனால், சர்வேயில் நாடு முழுக்க மக்கள், நிதிநிலைமையில் நம்பிக்கை இழந்து தவிப்பதாக தெரியவந்துள்ளது. இந்திய அடிப்படை நுகர்வோர் நம்பிக்கை மற்றும் போக்கு குறித்த சர்வே, கடந்த செப்டம்பர் மாதத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சர்வேயில் தெரியவந்த முக்கிய தகவல்கள்:
* பெட்ரோல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு  போன்றவற்றால் பல  அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகின்றது.
* சில பொருட்கள் விலைகள், நடுத்தர மக்களின் அன்றாட வீட்டு செலவுகளை பல மடங்கு உயர்த்தியுள்ளன.
* குறிப்பாக சேமிப்பு அறவே நின்று விட்டது; சிட்பண்டில் போடுவது, மாதாந்திர டெபாசிட் போடுவது போன்றவை குறைந்து விட்டது.
* பங்குச்சந்தையில் நுழைந்த பல நடுத்தர மக்கள் இப்போது அதை ெதாடர முடியாத அளவுக்கு நிலைமை போனதால் தவிக்கின்றனர்.
* அன்றாட செலவுகளுக்கு கூட கணக்கிட்டு, சிலவற்றை குறைத்து கொள்ள வேண்டிய அளவுக்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது.

* வேலைவாய்ப்பும் குறைந்து வருவது பல  குடும்பங்களில் பெரும் அடியாக கருதப்படுகிறது. அவர்களால் அடுத்த தலைமுறையாவது தங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்தும்  என்ற நம்பிக்கை இழந்து வி்ட்டனர்.
* பொருளாதார மதிப்பு  குறியீட்டெண் 3.9 புள்ளியாக குறைந்து விட்டது. அதுபோல, வேலைவாய்ப்பு நம்பிக்கை குறியீட்டெண் 4.3 புள்ளியாக உள்ளது.
*  தனி நபர் நிதி சார்ந்த நம்பிக்கை குறியீட்டெண் 8.9 புள்ளி குறைந்து விட்டது. ‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பங்குச்சந்தை தள்ளாட்டம், சீன -  அமெரிக்க வர்த்தக போர் பல வங்கிகளில் வராக்கடன்கள் அதிகரிப்பு போன்றவை தான் சாமான்ய மக்களின் வாழ்க்கையை பாதிக்க செய்துள்ளது. நுகர்வோர் குறியீட்டெண் அடுத்த சில மாதங்களில் கணிசமாக உயரும் என்று இந்த அமைப்பின் இயக்குனர் பாரிஜாத் சக்ரவர்த்தி கூறினார். இந்த சர்வே கடந்த மாதம் 21ம் தேதியில் இருந்து அக்டோபர் 5 ம் தேதி வரை பலதரப்பு மக்களிடம் எடுக்கப்பட்டது. 16 முதல் 64 வயது வரை உள்ள பலரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு தொகுக்கப்பட்டது. ஆயிரத்து ஐந்நூறு பேர் இந்த சர்வேயில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : homeowners , All direction, price rise, home remuneration
× RELATED வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க...