×

மதுரையில் அமமுக ஆலோசனைக்கூட்டம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 16 எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு: மேல்முறையீடு இல்லை என தினகரன் அறிவிப்பு

மதுரை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் மேல்முறையீடு இல்லை, இடைத் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளனர் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். இது ெதாடர்பாக மதுரையில் நேற்று நடந்த அமமுக ஆலோசனைக் கூட்டத்தை 16 பேர் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் பதவியை சபாநாயகர் பறித்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 25ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை தொடர்ந்து தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 16 பேருடன், கடந்த 26ம் தேதி அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மதுரையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். வெற்றிவேல், பார்த்திபன் பங்கேற்கவில்லை. அன்று இடைத்தேர்தலை சந்திக்கலாம் என்றபோது, 16 பேரிடம் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் எழுந்தன.

இறுதியாக 18 பேரிடமும் ஆலோசித்து, தனது முடிவை அறிவிப்பதாக கூறியிருந்தார். இதன்படி நேற்று மதுரையில் 18 பேரும் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 18 பேரில் தங்கதமிழ்செல்வன், மாரியப்பன் கென்னடி ஆகிய 2 பேர் மட்டுமே கூட்டத்துக்கு வந்தனர். 16 பேர் வராமல் புறக்கணித்ததால் ஆலோசனை கூட்டத்தை டி.டி.வி.தினகரன் ரத்து செய்து விட்டு, தனது முடிவை அதிரடியாக அறிவித்தார்.டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் கூறுவது போல அவரை நாங்கள் யாரும் மிரட்டவில்லை. அவர்கள் செய்த துரோகத்தின் பயத்தால்தான் அப்படி கூறுகின்றனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மேல்முறையீடு செய்யவில்லை. தேர்தலை சந்திப்பது என முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே காலியாக உள்ள 2 தொகுதிகள், தற்போது  காலியான 18 தொகுதிகள் என 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தால், அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

ஜனவரிக்குள் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு தேர்தல்  நடத்த வேண்டும். மீதியுள்ள 18 தொகுதிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக, உறுதி  செய்து அறிவிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்காக 39 தொகுதிகளிலும் தேர்தல் பொறுப்பாளர்களை முன்பே நியமித்து விட்டோம். சட்டமன்ற இடைத்தேர்தலிலும் பொறுப்பாளர்கள் அந்தந்த பகுதிகளில் இருந்து பணியாற்றுவார்கள். தமிழகத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசு தயாரிக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பால் தென்மாவட்ட பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல்முறையீடு செய்ததுபோல, பட்டாசு வழக்கிலும் துரிதமாக அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும்.   அதிமுகவினர் ஏற்கனவே ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்கு தலா ₹6 ஆயிரம் கொடுத்தும் தோல்வி அடைந்தனர். அதேபோல இந்த 20 தொகுதிகளிலும் எத்தனை ஆயிரம் கோடி செலவு செய்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது.  அவர்கள் எந்த தொகுதியிலும் டெபாசிட் கூட பெற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai ,Dinakaran , ttv Dinakaran
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...