×

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு

சென்னை: டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் நேற்று ஒரே நாளில் 2 கர்ப்பிணி பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரன்குப்பம் ஓம்சக்தி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி மனைவி 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தீவிர காய்ச்சல் மற்றும் தொண்டை காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சலின் தாக்கம் குறையாததால் மேல் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பிவும் சிகிச்சை பலன் இன்றி வினோதினி உயிரிழந்தார். ஆம்பூர் அருகே ஏற்கனவே பெண் ஒருவர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு கர்ப்பிணி பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போல் பன்றிக்காய்ச்சல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் 57 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட நிலையில் 8 பேருக்கு பன்றிக்காய்ச்சலும் 5 பேருக்கு டெங்குவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு குழந்தைகள் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.   


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : swine flu deaths ,Tamil Nadu , Dengue, swine flu, pregnant women and children
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...