×

சட்டீஸ்கரில் நக்சல்கள் தாக்கி 2 போலீசார் பலி: டிவி கேமராமேனும் சாவு

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் உயிரிழந்தனர். மேலும், தொலைக்காட்சி கேமராமேன் ஒருவரும் கொல்லப்பட்டார். சட்டீஸ்கரில் வரும் 12, 20ம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலை சீர்குலைக்கும் வகையில் நக்சல்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று போலீசார் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீசாரும், தூர்தர்ஷன் கேமராமேன் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும், 2 போலீசார் காயமடைந்தனர். தாக்குதலில் உயிரிழந்தவர்கள் துணை ஆய்வாளர் ருத்ரா பிரதாப், உதவி காவலர் மங்கலு மற்றும் தூர்தர்ஷன் கேமராமேன் அச்சுதானந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனிடையே நக்சல் தாக்குதலில் உயிரிழந்த கேமராமேன் அச்சுதானந்தன்கு குடும்பத்தினருக்கு ₹15லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோரி கூறுகையில், “தூர்தர்ஷன் சார்பில் 10லட்சம் மற்றும் பத்திரிக்கையாளர் நல நிதியில் இருந்து ₹5 லட்சம் வழங்கப்படும்” என்றார். இந்நிலையில் பால்ராம்பூர் மாவட்டத்தில் நவாடி பகுதியை சேர்ந்த புத்தன் யாதவ்(65) என்பவர், நேற்று காலை வழக்கம்போல் தனது கால்நடைகளை காட்டிற்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது, நக்சல்கள் புதைத்து வைத்த கண்ணிவெடியை மிதித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பகுதியில் சாலை  அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் பாதுகாப்பு படையினர் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து நக்சல்கள் இந்த கண்ணிவெடியை புதைத்து வைத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : attack ,policemen ,Chhattisgarh ,TV cameraman , Chhattisgarh, Naxals, Deaths, TV Cameraman, Death
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பலோதா பஜாரில்...