×

தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்க போக்குவரத்து அதிகாரிகளுடன் கூடுதல் கமிஷனர் அருண் ஆலோசனை: ஒருங்கிணைந்து செயல்பட கூட்டத்தில் முடிவு

ெசன்னை: தீபாவளி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் கூடுதல் போலீஸ் கமிஷனர் அருண் நேற்று ஆலோசனை நடத்தினார். தீபாவளி பண்டிகையை கொண்டாட அதிக எண்ணிக்கையிலான மக்கள் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்துகள் மூலம் செல்வார்கள் என்பதால், பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் 6 இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. அதிகபடியான பேருந்துகள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் இயக்குவதற்காக  சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின்  உயர் அதிகாரிகள், அம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், பெருநகர சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, சிஎம்டிஏ மற்றும் சென்னை போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அனைத்து துறைகளும்  ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நடவடிக்கைகள், பேருந்து வழித்தடங்கள், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும்  போக்குவரத்து நிறுத்தம் இடங்கள் ஆகியவற்றை குறித்து கலந்தாய்வு ெசய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Commissioner ,Transport Officers ,Arun Consult ,gatherings ,Diwali , Diwali, transport officer, commissioner Arun, counseling
× RELATED நாய்க்கடிக்கு ஆளாகுபவர்களின் நிலையை,...