×

ஈரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

ஈரோடு: புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு அருகே உள்ள வெண்டிப்பாளையம் கிராமத்தில் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப் போவதாகவும் கிராம மக்கள் அறிவித்துள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60வது வார்டு பகுதியில் இருக்கக்கூடிய வெண்டிப்பாளையம் என்ற பகுதியில், புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கோடி ஏற்றி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடைகள் அமைத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று பொதுமக்கள் ஏற்கனவே எதிரிப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அவர்களின் எதிர்ப்பையும் மீறி, கடந்த 15ம் தேதி இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. கடை திறக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. பேச்சுவார்த்தையின் முடிவில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என அதிகாரிகள் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி அவர்களது எதிப்பை தெரிவித்து வருகின்றனர். பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் செல்லும் வழியில் இந்த டாஸ்மாக் கடையானது செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து புகார் அளிக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இதனை கண்டித்து இன்று அப்பகுதியில் உள்ள 100கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்களின் வாக்காளர் அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாகவும் கூறியுள்ளனர். மேலும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறு விளைவிக்கும் வகையில் இந்த டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால், அதனை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Erode ,house , Erode,TASMAC,Black,Struggle
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா