×

பட்டாசுகளை வெடிப்பதா, ரயிலை பிடிப்பதா? என்.இளங்கோவன், தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர்

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசு வெடித்துக்கொள்ள ஏற்கனவே  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்கிறது. தற்போது இதை மாற்றி 2 மணி நேரமே  பட்டாசு வெடிக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. பண்டிகை  கொண்டாட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கம் கொண்டிருக்கிறது. பொதுவாக,  தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் காலையில்தான் பண்டிகைக் கொண்டாட்டம் இருக்கும். பகலில் வெடிக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடு, இம்மாநில மக்கள் பண்டிகையையே கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளி விடுகிறது. புத்தாடை தரித்து, உணவுண்டு களிப்போடு இருக்கும்போது பட்டாசு கொளுத்துவதுதான் பண்டிகை நிறைவை தரும். இதுதவிர, இரவில் 2 மணி நேரத்திற்குள் வெடித்து முடிக்கச் சொல்வதால், ஒரே நேரத்தில் வெடிக்கும்போது அதிகளவில் காற்று மாசும், ஒலி மாசும் ஏற்படும். பகல் துவங்கி அவ்வப்போது வெடிக்கும்போது, மாசின் வேகம் குறைந்து, காற்றில் கலந்து, தீவிரம் அதிகம் இருக்காது. இதைப்போல, பட்டாசு வெடிக்கும் அந்த குறிப்பிட்ட 2மணி நேரத்தில் அதிக விபத்துகளுக்கும் வாய்ப்பிருக்கிறது. அசம்பாவிதம் ஏற்படும் எல்லா இடத்திற்கும் தீயணைப்பு, மீட்பு வாகனங்கள் போய்ச்சேர முடியாது. அத்தனை இடங்களுக்கும் போலீஸ் கண்காணிப்பும் கிடைக்காது.

சிறு காயங்களுக்கு ஆளாகவோருக்கு இரவு நேரத்தில் மருத்துவ உதவி கிடைப்பதிலும் பெரும் சிக்கல் இருக்கிறது. செவ்வாய்க்கிழமை ஒருநாள்தான் தீபாவளி. சொந்த ஊருக்கு வந்து மறுநாள் வேலைக்குப் போவதற்காக, அன்றிரவு 7மணிக்குள் ரயிலை பிடிக்க வேண்டிய கட்டாயம் பலருக்கு உண்டு. இவர்கள் எப்படி இரவை தேர்ந்தெடுத்து 2மணி நேரம் மட்டும் பட்டாசு கொளுத்தி பண்டிகை கொண்டாட முடியும்? பட்டாசு வெடிப்பதற்கு 2 மணி நேரமே உச்சநீதிமன்றம் ஒதுக்கித் தருவதால், பட்டாசுகள் வாங்கி வெடிப்போமா? வேண்டாமா? என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டால், பட்டாசு வணிகத்திற்கு மிகப்பெரிய தடை வந்து விடும்.
 இந்தியா முழுவதும் ₹4 ஆயிரம் கோடிக்கு நடந்து வரும் பட்டாசு வணிகமும், நேரடியாக, மறைமுகமாக இத்தொழிலில் உள்ள ஒரு கோடிப்பேரும்  மிகப்பெரிய பாதிப்பிற்கு ஆளாவர். விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே இருக்கிற 8 லட்சம் தொழிலாளர்கள், குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். தீபாவளி தினமான அந்த ஒற்றை நாளை நம்பித்தான் ₹4ஆயிரம் கோடி வர்த்தகமே இருக்கிறது. இயற்கை இடர்பாடுகளோ, வியாபாரி வீட்டில் துக்கமோ ஓராண்டு வருமானத்தை கெடுத்து விடும்.

இச்சூழலில் நேரம் ஒதுக்கி பட்டாசு வெடிக்கச் சொல்வதால், பாதிப்பே அதிகம். எங்களைப்பற்றி அரசுக்கும், அதிகாரிகளுக்கும் சிந்தனை, கவலை இல்லை. தயாரிக்கும் பட்டாசுகளில் தடை செய்யப்பட்ட எந்த கெமிக்கலும் பயன்படுத்தப்படுவதில்லை. சுப்ரீம் கோர்ட் கொடுத்த 125 டெசிபல் ஒலிக்கு உட்பட்டுத்தான் பட்டாசுகளை தயாரித்து தருகின்றனர். நாங்களும் அதை விற்கிறோம். வெடிபொருட்கள் கட்டுப்பாட்டு துறையின் விதிகளுக்கு உட்பட்டுத்தான் தயாரிப்பும், விற்பனையும் நடக்கிறது. மத்திய, மாநில அரசுகள், காவல்துறை, தீயணைப்புத்துறை என அத்தனை பேரிடமும் உரிமம் பெற்றுத்தான் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது. அரசால் அனுமதி பெற்ற அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களான எங்களுக்கு, வணிக பாதுகாப்பு அவசியம் வேண்டும். தீர்ப்பு, அத்தனை பேருக்கும்  அச்ச உணர்வைக் கொண்டு வந்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் அத்தனை பேருமே பாதிக்கப்படுவோம். மறுபரிசீலனை வேண்டும்.

இரவில் 2 மணி நேரத்திற்குள் வெடித்து  முடிக்கச் சொல்வதால், ஒரே நேரத்தில் வெடிக்கும்போது அதிகளவில் காற்று மாசும், ஒலி மாசும் ஏற்படும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fireworks crash ,N.Lalongovan ,General Secretary ,Tamilnadu Fireworks Consortium , Fireworks can be exploding, catching the train, lingerie
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக...