×

இடைத்தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும்: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் இடைத் தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி ெதாடரும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் அடுத்த 2 மாதங்களில் எப்படியாவது தேர்தலை நடத்தியாக வேண்டும். 5 மாநில சட்டசபை தேர்தலுடன் 2 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள ஆட்சியாளர்கள் தோல்வி பயத்தினால் தமிழக தலைமை செயலாளர் மூலமாக தமிழகத்தில் மழைபெய்யப்போகிறது புயல் அடிக்கப்போகிறது என்று பொய்யான காரணத்தைகூறி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினர்.

தேர்தல் ஆணையமும் அதை ஏற்றுக்கொண்டு இரண்டு தொகுதியின் இடைத்தேர்தலை தள்ளிவைத்துவிட்டது. 18 தொகுதிகளைப் பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த முடியாது. மேல்முறையீடு செய்யவில்லை என்றால் 30 நாட்கள் பார்த்துவிட்டு தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவிக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தமட்டில் தேர்தல் வந்தால் நல்லது என்று மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர்.
இலங்கையில் ராஜபக்சே பிரதமராக பதவியேற்றதை ரணில் விக்ரம சிங்கே ஏற்கவில்லை. ராஜபக்சே காலத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுடைய காலம் தமிழகத்துக்கு மிகவும் கசப்பான காலம். தமிழகத்தில் நடக்கும் 20 தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும். ஒரு வேலை தேர்தல் நடந்தால் ஏற்கனவே திமுக போட்டியிட்ட இடங்களில் திமுகவும் காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் காங்கிரசும் போட்டியிடும் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பது பற்றி திமுக,

காங்கிரஸ் தலைவர்கள் பேசி முடிவெடுப்பார்கள். எப்படி என்றாலும் திமுகவுடன் கூட்டணியை காங்கிரஸ் தொடரும். அமெரிக்காவில் உள்ள ஒட்டு மொத்த அமெரிக்கர்களும் ஓட்டுப்போட்டா விருதுக்காக தமிழிசையை தேர்வு செய்தார்கள். உலகின் புகழ் பெற்ற தலைவர்களின் பட்டியலில் மோடிதான் கடைசியாக உள்ளார். மோடியே நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழிசைக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,alliance ,Congress ,interview ,by-election ,Thirunavukkar , By-elections, DMK, Congress, coalition, Thirunavukkarar
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு செலுத்தும் வாக்குகள் வீணாவது உறுதி : பிரதமர் மோடி