×

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் துப்பாக்கி சூடு: 11 பேர் பலி...3 காவலர் காயம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் வழிபாட்டு தலத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் ட்ரீ ஆப் லைப் என்ற யூத வழிபாட்டு மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் யூத மக்களின் ஜெபக்கூடம் அருகே மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 3 காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

காவல்துறையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் காயமடைந்த ராபா்ட் பவா் என்பவர் போலீசாரிடம் சரணடைந்தார். 11 பேரை கொலை செய்தது, போலீசாரை துப்பாக்கியால் தாக்கியது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ராபா்ட் பவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கிச்சுடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரங்கலை தெரிவித்ததுடன், அங்கு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் கவர்னர் டாம் உல்ஃப் தனது டுவிட்டர் பதிவில் துப்பாக்கிச்சூட்டிற்கு தனது கண்டனத்தையும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : city ,Pittsburgh ,detainees , United States, Pittsburgh City, shotgun, murdered, guards
× RELATED சென்னை மாநகரில் சீரான மின்விநியோகம்...