சென்னை: தேமுதிக மாணவர் அணி நிர்வாகிகளுடன் பிரேமலதா விஜயகாந்த் நேற்று திடீரென ஆலோசனை நடத்தினார்.சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து தேமுதிக மாணவர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கட்சியினருக்கு கட்சியை வலுப்படுத்துவது, உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார். மேலும் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்தும் கருத்துக்களை பிரேமலதா விஜயகாந்த் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் தேமுதிக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி, பேராசிரியர் எஸ்.சந்திரா, மாணவர் அணி செயலாளர் ஏ.எம்.ஜி.விஜய்குமார், மாணவர் அணி துணை செயலாளர் ஜே.பெஞ்சமின் ஜேக்கப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி