×

ஸ்டான்லி மருத்துவமனையில் 160 பேர் அனுமதி 5 பேருக்கு டெங்கு உறுதி: காய்ச்சலுக்கு தனி வார்டு துவக்கம்

வண்ணாரப்பேட்டை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வரும் 160க்கும் மேற்பட்டோரில் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஆயிரக்கணகானோர்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் பெரம்பூர், புளியந்தோப்பு, மாதவரம், எண்ணூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரட்டையர் குழந்தைகள் உள்பட 7 பேர் இறந்துள்ளனர். தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், மருத்துவமனைகளில் பொதுமக்கள் குவந்த வண்ணம் உள்ளனர்.சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக 160க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுளள்னர். அதில், 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமன நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கொசு வலை அமைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த பிரிவில் சிகிச்சை உரிய முறையில் அளிக்கப்படுகிறதா என ஸ்டான்லி மருத்துவமனை டீன் பொன்னம்பல நமச்சியவாயம் நேற்று ஆய்வு செய்தார். அங்கு நோயாளிகளிடம், உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.   இதேபோல், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையிலும் சிறப்பு வார்டு துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து டீன் பொன்னம்பலம் நமச்சிவாயம் கூறுகையில், ‘‘காய்ச்சலுக்காக இங்கு வரும் பொதுமக்களை அனுமதித்து சிகிச்சை அளிக்கிறோம். முதல் கட்டமாக அவர்களது, ரத்த மாதிரி பரிசோதனை செய்து, அதன் முடிவை வைத்து தொடர் சிகிச்சை அளிக்கப்படும். அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து தீவிரமாக கண்காணிக்கிறோம். இதற்காக சிறப்பு பிரிவில் 24 மணிநேரமும் டாக்டர்கள் செயல்படுவார்கள்’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ward , 160 boble allot,The Battle ,Dengue Angle,Poebele: A Seperate Ward Obeing, Baiter
× RELATED மறைமலைநகர் நகராட்சியில் என்எச்...