×

நியூயார்க் சிஎன்என் டிவி ஆபிசில் மர்மபார்சலால் பீதி

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சிஎன்என் செய்தி நிறுவன அலுவலகத்தில் மர்மப்பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு இந்த வார தொடக்கத்தில் மர்ம பார்சல் ஒன்று வந்தது. வாஷிங்டன் நகரில் உள்ள அவரது இல்ல முகவரி குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டிருந்த அந்த பார்சல் ஒபாமா வீட்டுக்கு அனுப்பப்படும் முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவியும் கடந்த 2016ம் ஆண்டில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் வசிக்கும் நியூயார்க் வீட்டின் முகவரியை குறிப்பிடப்பட்ட மற்றொரு பார்சல் வந்தது கண்டறியப்பட்டது.

இவ்விரு பார்சல்களும் சம்மந்தப்பட்ட முகவரியை அடையும் முன் கண்டறியப்பட்டதால் விபரீதம் தடுக்கப்பட்டது. இந்த நிலையில் நியூயார்க்கில் உள்ள அமெரிக்க செய்தி நிறுவனமான சிஎன்என் அலுவலகத்திற்கு நேற்று மர்ம பார்சல் ஒன்று வந்தது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் `எங்கள் அலுவலகத்திற்கு வந்த மர்ம பார்சலை கண்டுபிடித்து அகற்றிவிட்டோம்’ என தெரிவித்துள்ளது. இந்த பார்சலில் வெடிகுண்டு இருக்கலாம் என பீதி நிலவியது. இந்த தகவலை நியூயார்க் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : New York ,CNN , mystery, New York, CNN TV
× RELATED 1965 மணி நேரம், 163 பேர் உழைப்பில் உருவான அலியா பட் புடவை