×

இயக்குநர் சுசிகணேசன் மீது நடிகை அமலாபாலும் METOO புகார்

சென்னை: லீனாமணிமேகலையை தொடர்ந்து இயக்குநர் சுசிகணேசன் மீது நடிகை அமலாபாலும் METOO புகார் அளித்துள்ளார். METOO மூலம் சினிமா துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களுக்கு நிகர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை அமலாபால் தனது ட்விட்டர் பக்கத்தில் புகார் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இயக்குநர் சுசி கணேசன் மீது, லீனா மணிமேகலை கூறிய குற்றச்சாட்டை ஆதரிப்பதாக அமலா பால் கூறியிருக்கிறார்.

பெண்ணியத்திற்கு சிறிதளவும் மரியாதை தர தெரியாத ஒரு மனிதரிடம் துணை இயக்குநராக அந்த பெண் என்ன பாடுபட்டு இருப்பார் என்பதை தம்மால் புரிந்துகொள்ள முடிவதாகவும் அமலா பால் தெரிவித்திருக்கிறார்.
திருட்டு பயலே-2 படத்தில், தாம் கதாநாயகியாக இருந்தாலும், அவரது இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியாத யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை தாம் சந்தித்ததாக, இயக்குநர் சுசி கணேசன் மீது நடிகை அமலா பால் பாலியல் புகார் கூறியுள்ளார்.

மேலும் இயக்குநர் சுசி கணேசனால், தனக்கு நேர்ந்த கொடுமையை சமூக வலைதளங்கள் மூலம், லீனா மணிமேகலை வெளியில் செல்லியிருப்பதற்கு தமது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும், அமலா பால் குறிப்பிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : METOO ,Amalabal ,Director Suzigans , Director Susi Ganesan, actress Amala Paul, METOO, complained
× RELATED ஆணுறுப்பை தொட சொன்ன இயக்குனர்:...