×

ராமாக்காள் ஏரி வறண்டதால் வெளிநாட்டு பறவைகள் வருகை குறைந்தது

தர்மபுரி:  தர்மபுரி  கிருஷ்ணகிரி செல்லும் பிரதான சாலையில், சுமார் 265 ஏக்கர் பரப்பளவில் ராமாக்காள் ஏரி அமைந்துள்ளது. இதில் 90 ஹெக்டேர் அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் நூற்றுக்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ராமாக்காள் ஏரியை 2.81 கோடியில் சுற்றுலா தலமாக்கும் பணிகள் தொடங்கி, அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நடைமேடை, இருக்கைகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், ஏரிக்கரை முழுவதும் புதர்மண்டிய நிலையில் உள்ளது. ஆண்டு தோறும் வெளிநாட்டுப்பறவைகள் இனப்பெருக்கம் செய்ய, ராமாக்காள் ஏரிக்கு வந்து செல்கின்றன. இதனால் ஏரியின் நடுவே பறவைகள் சரணாலயத்திற்காக 5க்கும் மேற்பட்ட தீவு திட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது அக்டோபர் மாத சீசனுக்கு மஞ்சள்மூக்கு நாரை, சின்னக்கொக்கு, சிறிய பச்சி கொக்குக்குகள் ஏரியில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே ராமாக்காள் ஏரி வறண்டு விட்டது. இதனால் வழக்காமாக வரும் வெளிநாட்டு பறவைகளான பிலிக்கான், கறுப்பு மூக்கு நாரை, செங்கால் நாரை, நத்தைக்கூடை நாரை போன்ற பறவைகளின் வருகை சரிந்து விட்டது. பிப்ரவரி மாத இறுதியில், நீர்க்கோழி உள்ளிட்ட பறவைகளும், ஆஸ்திரேலியா நாட்டுப்பறவையான நீள வால் இலைக்கோழி பறவைகள் வந்து குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும். தென்மேற்கு பருமழை சீசன் முடிந்து, வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கவுள்ளது. இதன் மூலம் நீர்வரத்து அதிகரித்து ஏரியில் நீர் நிரம்பும், இதை கண்டு வெளிநாட்டு பறவைகள் மேலும் குவியும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ramakkal Lake , Ramakal Lake, Foreign Birds, Visit
× RELATED ராமாக்காள் ஏரியை சுற்றுலா தலமாக்க துரித நடவடிக்கை-பொதுமக்கள் கோரிக்கை