×

ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் மூலம் ரூ121 கோடி வருவாய் ஈட்டியது எம்டிசி: 1 லட்சத்து 21 ஆயிரம் பயணிகள் பயன்படுத்துகின்றனர்

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் (எம்டிசி) சார்பில், தினசரி, 3,000க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. 600 க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் இப்பஸ்களின் வாயிலாக, 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் நாள்தோறும் பயணித்து வருகின்றனர். குறிப்பாக தினசரி வேலைக்கு செல்வோரின் வசதிக்காகவும் வியாபாரிகளுக்காகவும் எம்டிசி நிர்வாகம் ரூ1,000 கட்டணத்தில் ‘பஸ் பாஸ்’ செயல்படுத்தி வருகிறது. இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து ‘எம்டிசி’ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சென்னையில் பஸ் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக,  ஆயிரம் ரூபாய் ‘பாஸ்’ திட்டம் பயன்பாட்டில் உள்ளது.

இதில், ரூ1,000 செலுத்தி ‘பாஸ்’ எடுத்துக்கொண்டு, மாதம் முழுவதும் பயணம் மேற்கொள்ளலாம். இந்த திட்டத்தில் மூலம் மாதந்தோறும், ரூ1 லட்சத்து, 21 ஆயிரம் பேர் பயன்பெறுகின்றனர். இதன்மூலம் மாதந்தோறும், ரூ12 கோடியே, 10 லட்சம் ‘எம்டிசி’க்கு வருவாய் கிடைக்கிறது. இதன்படி கடந்த ஜனவரி துவங்கி அக்டோபர் வரையிலான, 10 மாத காலக்கட்டத்தில், 12 லட்சத்து, 10 ஆயிரம் பேருக்கு ‘பஸ்பாஸ்’ வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், ரூ121 கோடி ‘எம்டிசி’க்கு வருவாய் கிடைத்துள்ளது’’ என்றார்.

கட்டணத்தில் மாற்றம் இல்லை அதிகாரிகள் திட்டவட்டம்
‘எம்டிசி’யில் வழங்கப்படும், ரூ1,000 கட்டண ‘பஸ்பாஸ்’க்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘டிக்கெட்’ கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், இந்த பாஸின் விலையில் ரூ300 வரை உயர்த்தப்படும் என தகவல் வெளியானது. பிறகு மறுக்கப்பட்டது. தொடர்ந்து இந்த சர்ச்சையானது நிலவி வருகிறது. ஆனால், கட்டண பஸ்பாஸின் விலையை உயர்த்தும் பட்சத்தில், பயணிகள் ரயிலை நோக்கி சென்றுவிடுவார்கள் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். மேலும் இந்த ‘பாஸ்’ மூலம் நல்ல வருவாய் கிடைப்பதால், அதை இழக்க விரும்பாத நிர்வாகம் கட்டணத்தில் மாற்றம் செய்ய வேண்டாம் என திட்டவட்டமாக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : passengers ,MTV , Bus pass, revenue, MTC
× RELATED சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து,...