×

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியன் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டம்: சிஐஎஸ்எப் பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்

சென்னை: எழும்பூர் தொகுதியில் உள்ள வாக்கு சாவடிகளை ஜான்பாண்டியன் கைப்பற்றயுள்ளதாகவும், தொகுதி முழுவதும் பதற்றமான தொகுதி என அறிவித்து சிஐஎஸ்எப் பாதுகாப்பு கோரியும் தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக வேட்பாளர் பரந்தாமன் கடிதம் எழுதியுள்ளார்.  எழும்பூர் (தனி) தொகுதி சென்னையின் முக்கிய தொகுதியாக பார்க்கப்படுகிறது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் பரந்தாமன் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு ஜான்பாண்டியன் வேட்பாளராக அறிவித்தபோதே பரபரப்பை ஏற்படுத்தியது. ஏன் என்றால் ஜான்பாண்டியன் கடந்த 2001ம் ஆண்டு தேர்தலின் போது, எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதனால் வெற்றிபெற்ற வேட்பாளரை தாக்க முயன்ற வரலாறு உள்ளது.தற்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் எழும்பூர் தொகுதியில் களம் இறங்கியுள்ளார். தற்போது கூட பிரசாரத்தில், தென் மாவட்டத்தை சேர்ந்த ஆட்கள் பலர், எழும்பூர் தொகுதிகளில் இறக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.இந்தநிலையில், திமுக வேட்பாளர் பரந்தாமன், தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், எழும்பூர் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் ஜான்பாண்டியன் போட்டியிடுகிறார். இவர், கொலை மற்றும் குற்ற வழக்கு பின்னணி கொண்ட மோசமான நபர் என்பதும், கடந்த 2001ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தவறாக நடந்துகொண்டதும், தொகுதி மக்கள் மற்றும் செய்திதாள்கள் மூலம் தெரியவந்தது. மேலும் கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் ரவுடிகள் தலையீடு இருந்ததால் குறைவான வாக்கு பதிவு நடந்துள்ளது.எனவே தற்போது நடைபெற உள்ள தேர்தலில், ஜான்பாண்டியன் எழும்பூர் தொகுதி வாக்குசாவடிகளை கைப்பற்றவும், ஆள்மாறாட்டம் செய்து நேர்மையான வாக்காளர்களின் வாக்கை செலுத்தி, சட்ட விரோத செயலில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. எனவே அவற்றில் இருந்து வாக்காளர்களை பாதுகாத்து, அச்சமின்றி ஜனநாயக கடமையை செலுத்தும் வகையில் எழும்பூர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளையும் பதற்றமானவை என அறிவிக்க வேண்டும். மேலும் வாக்கு சாவடிகளுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு வழங்கி, தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்….

The post அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியன் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டம்: சிஐஎஸ்எப் பாதுகாப்பு கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Janpandian ,Election Commission ,CISF ,CHENNAI ,Egmore ,Constituency ,Dinakaran ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...