×

எம்.ஜி.ஆர். சிகிச்சை விவகாரம் : ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை பதில் மனு

சென்னை : எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்வது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை பதில்மனு தாக்கல் செய்துள்ளது.  ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.  அப்போலோ மருத்துவர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்கள், கார் ஓட்டுநர்கள் என பல தரப்பினரும் விசாரணை ஆணையம் முன் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த விவரங்களை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் எம்ஜிஆர்-ன் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.  

34 ஆண்டுகளுக்கு பிறகு  எம்ஜிஆர்-ன் சிகிச்சை ஆவணங்களை வழங்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. எம்ஜிஆர்-ஐ வெளிநாடு அழைத்துச் செல்ல எதனடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது.  கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் ஜெயலலிதா அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிசம்பர் மாதம் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. எம்ஜிஆரை போல் ஜெயலலிதாவை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்து செல்லாதது ஏன் எனவும்  ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் எம்.ஜிஆர்  சிகிச்சை ஆவணங்களை 23-ம் தேதிக்குள் பதில் தர ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையின் பதில் மனுவை ஆய்வு செய்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MGR ,commission ,Arumugamasi , MGR. Treatment issue, Apollo hospital,response petition , Arumugamasi Commission
× RELATED எம்ஜிஆர் கழகம் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்